சதொச நிவாரண பொதியில் மாற்றம்

Prabha Praneetha
4 years ago
சதொச நிவாரண பொதியில் மாற்றம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச நிறுவனத்தினூடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் 1998 ரூபா நிவாரண பொதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளாா்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சதொசவினூடாக பெற்றுக்கொடுக்கப்படும் அரிசி உள்ளிட்ட சீனி, தேயிலை, சவர்க்காரம், நெத்தளி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய 1998 ரூபா பெறுமதியான நிவாரண பொதியில் 10 கிலோ கிராம் சம்பா அரிசியை பெற்றுக்கொடுக்கிறோம். அதில், 2 கிலோ கிராம் தேசிய சிவப்பு சினியும் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.

ஆனால், சில சதொச கிளைகளுக்கு சிவப்பு சீனி கிடைக்காமையினால் நிவாரண பொதியை பெற்றக்கொள்ளும் நுகர்வோருக்கு சீனிக்கு பதிலாக என்ன பெருளை பெற்றுக்கொடுப்பது என்ற பிரச்சினை எழுந்துள்ளது.

அதற்கமைய, நாளையிலிருந்து (27) சீனியை பெற்றுக்கொள்ள முடியாத நுகர்வோர் 1998 ரூபா பெறுமதியான அந்த பொதியில் சீனிக்கு பதிலாக 2 கிலோ கிராம் சம்பா அரிசியை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு மேலதிகமாக இதுவரை பெற்றுக்கொடுக்கப்பட்ட 5 கிலோ கிராம் அரிசிக்கு பதிலாக 10 கிலோ கிராம் அரிசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் மாத்திரமே அமுலில் இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4