சங்குகளுடன் சந்தேகநபர் கைது

Prasu
4 years ago
சங்குகளுடன் சந்தேகநபர் கைது

புத்தளம் - மன்னார் வீதியின் 4 ஆம் கட்டைப்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கடல் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் தலைமையக பொறுப்பதிகாரி ருவன் சுரங்க உடுகும்புரவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், நேற்று (25) நள்ளிரவு குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், சந்தேக நபரிடமிருந்து மூன்று உர மூடைகளில் அடைக்கப்பட்ட 487 சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட குறித்த சங்குகள், சட்டவிரோதமாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என புத்தளம் தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறு சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சங்குகள் ஜாதி மற்றும் கௌரி இனத்தைச் சேர்ந்தவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4