27.12.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: மனதில் உற்சாகம் பிறக்கும். குழந்தைகள் பற்றிய கவலை தீரும்.
பரணி: உங்களின் தனித்தன்மை வெளிப்படும். வெற்றிகரமான நாள்.
கார்த்திகை 1: குடும்பத்தினரின் மனநிலையை அறிந்து அவர்களை அனுசரித்து செல்வீர்கள்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: மேலதிகாரிகளை அனுசரித்து சென்று நன்மை காண்பீர்கள்.
ரோகிணி: மனப்பக்குவம் உண்டாகும். தொழில், பணியில் மேன்மை உண்டு.
மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு கிடைக்க தாமதமாகும்
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: பயம் தீரும். நட்பு வட்டம் விரிவடையும்.
திருவாதிரை: புதிய திட்டம் ஒன்றை தீட்டி அதில் முன்னேற்றம் காண்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: எதிர்பாலினத்தினரால் திடீர் நன்மை ஒன்று உண்டாகும்.
கடகம்:
புனர்பூசம் 4: எடுத்த செயலில் வெற்றிபெற அதிக முயற்சி தேவைப்படும்.
பூசம்: உடல் நலம் மேம்படும். பண விவகாரத்தில் நிதானமாக இருக்கவும்.
ஆயில்யம்: குடும்பத்தினரை அனுசரித்து சென்று நன்மை காண்பீர்கள்.
சிம்மம்:
மகம்: பணியிடத்தில் பிறருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு
பூரம்: உறவினரிடம் இருந்து உதவி கிடைக்கும். கலகலப்பான நாள்.
உத்திரம் 1: வரவேண்டிய கடன் பாக்கியைச் சுலபமாக வசூல் செய்வீர்கள்.
கன்னி:
உத்திரம் 2,3,4: தொழில் கை கொடுக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பர்
அஸ்தம்: நிறை குறைகளை அலசி ஆராய்ந்து இன்று செயலாற்றுவீர்கள்.
சித்திரை 1,2: கருணையுடன் மற்றவருக்கு உதவும் சிந்தனை ஏற்படும்.
துலாம்:
சித்திரை 3,4: தனலாபம் உண்டு. பெற்றோரின் உடல் நலம் மேம்படும்.
சுவாதி: சிரமப்படுபவர்களை கைதுாக்கி விட்டு அவர்களின் ஆசியை பெறுவீர்கள்.
விசாகம் 1,2,3: பணியிடத்தில் புதுமையைப் புகுத்தி வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம்:
விசாகம் 4: மற்றவர்களைத் துல்லியமாகக் கணித்து அவரை வெல்வீர்கள்.
அனுஷம்: உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாளாக இருந்த கவலை தீரும்.
கேட்டை: கொடுக்கல், வாங்கலின் மூலம் நல்லதொரு தொகை கைக்கு வரும்.
தனுசு:
மூலம்: பயணத்தின்போது கவனத்துடன் இருப்பது மிகவும் முக்கியம்
பூராடம்: நேற்றைய பிரச்னை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
உத்திராடம் 1: தொழில் வளர்ச்சி கூடும். உங்களுக்கு தொல்லை தந்த எதிரி விலகுவார்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: குடும்ப ஒற்றுமை பலப்படும். பண உதவி கிடைக்கும்.
திருவோணம்: சேமிப்பு உயரும் நாள். நல்லவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
அவிட்டம் 1,2: புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு செய்ய வேண்டாம்.
கும்பம்:
அவிட்டம் 3,4: உங்களுக்கு நீங்களே எதிரியாகாமல் கவனமாக இருங்கள்.
சதயம்: யாருடைய வம்புக்கும் போகாமல் இருப்பது நல்லது
பூரட்டாதி 1,2,3: திட்டமிட்ட பயணத்தில் சிறிய மாற்றம் செய்வீர்கள்.
மீனம்:
பூரட்டாதி 4: உடல்நலம் சீராகும். மனதில் இருந்த குழப்பம் தீரும்.
உத்திரட்டாதி: வீண் சண்டை, விவாதங்களில் இருந்து ஒதுங்குவீர்கள்.
ரேவதி: உங்களது திறமைகளை வெளிப்படுத்த இன்று வாய்ப்புகள் வரும்.