அவுஸ்திரேலியாவில் முதல் ஒமைக்ரொன் மரணம் பதிவானது!

#world_news
Nila
4 years ago
அவுஸ்திரேலியாவில் முதல் ஒமைக்ரொன் மரணம் பதிவானது!

அவுஸ்திரேலியாவில் கொவிட்-19 இன் ஒமைக்ரொன் திரிபினால் ஏற்பட்ட முதல் மரணம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்று குறித்த மரணம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மேற்கு சிட்னியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஒமைக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்ட 80 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் முழுமையாக தடுப்பூசி ஏற்றியுள்ளதாக அந்நாட்டு சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த மாநிலத்தில் இன்று 6,000 க்கும் மேற்பட்ட புதிய கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரொன் பரவலினால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற போதிலும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் வீதம் குறைவாக உள்ளமையால், புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதை அவுஸ்திரேலியா தவிர்த்துள்ளது.

இந்நிலையில், முதல் ஒமைக்ரொன் மரணம் ஏற்பட்டுள்ளதால் இன்று முதல் அம்மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4