பொருட்களின் விலை அதிகரிப்புக்கு தீர்வு காண்பது இலகுவான விடயமல்ல – மஹிந்த அமரவீர

Prabha Praneetha
4 years ago
பொருட்களின் விலை அதிகரிப்புக்கு தீர்வு காண்பது இலகுவான விடயமல்ல – மஹிந்த அமரவீர

பொருட்களின் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகுவான விடயமல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றினால் சர்வதேச ரீதியில் சில பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனால் தான் வரி குறைக்கப்பட்ட போதிலும் விலை அதிகரிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளாா்.

கிராமங்களில் நடமாடுபவர்களாகவும், கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குபவர்களாகவும் மக்கள் வாழ்வதற்கு சிரமப்படுகின்றனர் என்பதை புரிந்துகொள்கிறோம்.

தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு வாங்குவதற்கு முன்பை விட இரண்டு மடங்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் ஒன்றும் நடக்க போவதில்லை் என்றும், உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதே சிறந்த விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உரப் பிரச்சினை மற்றும் காலநிலை நிலைமை காரணமாக உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4