இந்தியாவுடன் திருகோணமலை எண்ணெய் தொட்டி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்!

Mayoorikka
4 years ago
இந்தியாவுடன் திருகோணமலை எண்ணெய் தொட்டி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்!

ஒரு மாத காலத்திற்குள் திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணைகளை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான நீண்ட இழுபறியான ஒப்பந்தத்தில் இலங்கை இந்தியாவுடன் கையெழுத்திடும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

“நாங்கள் 16 மாதங்களாக இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், இன்னும் ஒரு மாதத்தில் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவோம் என நம்புகிறோம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்திய பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்

இதற்காக  டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (Trinco Petroleum Terminal Ltd) என்ற துணை நிறுவனத்தை உருவாக்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4