அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

Mayoorikka
4 years ago
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

கட்டுநாயக்க, கிம்புலாபிட்டிய பிரதேசத்தில்  தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்று இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையின் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, விமானத்தில் நான்கு பேர் பயணித்துள்ள நிலையில் அதில் மூவர் காயமடைந்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இதற்கு சில நாட்களுக்கு முன்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலகுரக விமானம் ஒன்று பயாகல கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4