தமிழர் வரலாறும், தொன்மையும். பாகம் - 11

தமிழர் வரலாறும், தொன்மையும். பாகம் - 11

நேற்றைய தொடர்ச்சி...

கி.பி.1010

சைவ நூற்தொகுப்பு திருமறை நம்பியாண்டார் நம்பி அவர்களால் தொகுக்கப்பட்டது.
கி.பி.1150

வீர சைவர் தலைமை மேற்கொண்டு பசுவண்ணா, மனிதநேயம், மனிதர்களிடையே சம நிலை, சிவலிங்க வழிபாடு இவற்றை போதித்தார்.

கி.பி.1232

போசள வீர நரசிம்மன் காவிரிக்கரையில் மகேந்திரமங்கலத்தில் பாண்டியர்களையும், காடவ கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்து, மூன்றாம் இராசராசனை விடுவித்து சோழ நாட்டை மீட்டு சோழரிடம் ஒப்படைத்தான். போசளர்கள் திருச்சிக்கு அருகாமையில் கண்ணூர் கொப்பத்தில் துணை தலைநகரை உருவாக்கினார்.

கி.பி.1250

சைவ சித்தாந்தி மெய்கண்டார் காலம்.

கி.பி.1268-1369

தமிழ் அறிஞர் வேதாந்த தேசிகர் காலம். வடகலை வைணவத்தை காஞ்சியில் அறிமுகப்டுத்தினார்.

கி.பி.1311

தமிழ்நாட்டில் முகமதியர் ஆட்சி வேரூன்றியது.

கி.பி.1333-1378

மதுரை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக முகமதியர் ஆட்சியில் இருந்தது, முகமதியர்களின் வெற்றியைக் கண்டு கொதித்த இந்துக்கள் தக்காணத் தின் கிழக்கில் புரலாய நாயக்கனும், கபாய நாயக்கனும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

கி.பி.1340

போசள மன்னன் மூன்றாம் வல்லாலன் காலத்தில் மதுரை சுல்தான் சலாவுதீன் அசன்சாவை கொன்றான்.

சம்புவராயர்கள்

சோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப்பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில் ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராஜகம்பீர இராச்ஜியம் என்ற பெயரில் ஆன்டனர். விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர். சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர். அழகிய சிங்கன், இராஜராஜசம்புவராயன், திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன், வீரப்பெருமாள், எடிதிலி சம்புவராயன், இராஜகம்பீர சம்புவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.

கி.பி.14

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட முகமதியர் படையெடுப்பு பாண்டியனை ஒழித்தது முகமதியர் படையெடுப்பு பின்போது மூன்றாம் வீரவல்லாலன் சம்புவராயர்களைத் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் காவலர்களாக நிறுத்தினார். சம்புவராயர்கள் தமிழையும் தமிழ்க் குடியினரையும் பெரிதும் பேணியுள்ளார்கள் இரட்டைப்புலவர்கள் இவர்களுடைய ஆதர்வு பெற்றவர்கள். இவர்களின் நாணயங்கள் " வீரசெம்பன் குளிகைகள்" என அழைக்கப்பட்டன. தமிழர்களுக்கு புகலிடங்கள் அமைத்துக் கொடுத்தனர். "அஞ்சினான் புகலிடங்கள் அமைத்தார்கள்".

கி.பி.1336

அரிகரன் விஜயநகரஅரசை நிறுவினான். அரிகரனின் தம்பியும் துணையரசனுமாகிய புக்கன் முகமதியர்களுக்கு எதிராக போர் செய்தான். கம்பணன் தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தில் விஜயநகரத்தின் மகாமண்டலேசுவரனாக விளங்கினான். விஜயநகர ஆட்சிகாலத்தில் - தெலுங்கு பிராமணர்கள் தமிழகம் வந்தனர். துளுநாட்டைச் சேர்ந்த வேளாண். தொழில் செய்த ரெட்டியார்களும் வந்தனர். செளராட்டிரர்களும் குஜராத்திலிருந்து வந்தனர். வருணாசிரமம் வழியுறுத்தப்பட்டது. போர்த்துகீசியர்கள் வழி வந்த கிறித்துவத் துறவிகள் தமிழகத்துக் கடலோர பகுதிகளில் சமயப்பணி ஆற்றினார். சிற்றம்பர் நாடிகள் என்ற புலவரும், இரட்டைப்புலவர்களும், காலமேகப்புலவரும் இக்காலத்தில் வாழ்ந்தனர். 15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்
16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கிருட்டிண தேவராயர் புலவர்களின் புரவலராக இருந்தார்.

கி.பி.1350

தென்னிந்திய சித்தாந்தி அபிய திக்தத்திரர் காலம். சைவ, வைணவ வேற்றுமை அகற்ற பெரு முயற்சி எடுத்தவர்.

கி.பி.1500

திருப்புகழ் இயற்றிய தமிழ்ச் சித்தாந்தி அருணகிரிநாதர் காலம்.

தொடரும்....

மேலதிக தமிழர் வரலாறும் தொன்மையும் பாகங்களைப் பார்வையிட Click Here