28.12.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
28.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: சேமிப்பு உயரும். பணிச்சுமை கூடும். குடும்ப நிம்மதி மீளும்.
பரணி: திடீர் லாபம் வரும். சமீபத்திய கவலைகள் ஒரு வழியாக நீங்கும்.
கார்த்திகை 1: வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து நிம்மதி பெறுவீர்கள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: சக பணியாளர்களின் அனுசரிப்பு காரணமாக வெல்வீர்கள்.
ரோகிணி: நண்பருக்கு உதவி செய்யப்போய் சங்கடத்தில் மாட்ட வேண்டாம்.
மிருகசீரிடம் 1,2: நல்லவரின் உபதேசத்தைப் புறக்கணிக்காமல் ஏற்பீர்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: பேச்சுவார்த்தையில் உங்களின் அனுபவ அறிவு வெளிப்படும்.
திருவாதிரை: குடும்ப மகிழ்ச்சி கூடும். நல்லவர்களிடம் இருந்து உதவி கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: பணியாளர்களுக்கு ஏற்பட்ட அதிருப்திகள் அனைத்தும் சரியாகும்.

கடகம்: 
புனர்பூசம் 4: அலுவலகத்தில் முக்கியப் பொருட்களைக் கவனமாக கையாளுங்கள்.
பூசம்: ஜீரணம் சம்பந்தமான சிறு சிறு பிரச்னைகள் வந்து சரியாகும்.
ஆயில்யம்: கலைத்துறையில் ஈடுபாடு ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும்.

சிம்மம்: 
மகம்: வெளியூரில் இருந்து மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும்.
பூரம்: வாழ்க்கைத்துணையின் மூலம் நன்மை ஒன்று நிகழும்.
உத்திரம் 1: பிறருக்கு உதவிகரமாய் நடந்து கொண்டு செல்வாக்கு அடைவீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: புதிய துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் பயிற்சி பெறுவீர்கள்.
அஸ்தம்: அலுவலகப் பணத்தைக் கையாளும்போது நேர்மையாக இருங்கள்.
சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்திருந்த புதிய செய்தி தாமதமாக வரும்.

துலாம்: 
சித்திரை 3,4: சுற்றியுள்ளோரின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
சுவாதி: நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மனதில் மகிழ்ச்சி பெருகும்.
விசாகம் 1,2,3: உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: பண விஷயத்தில் இருந்து வந்த தடைகள் இன்று அகலும்.
அனுஷம்: சிறு சிறு தேவைகள் உடனுக்குடன் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.
கேட்டை: திட்டமிட்ட பயணம் சற்றே தள்ளிப்போனாலும் மகிழ்ச்சியான நாள்.

தனுசு: 
மூலம்: வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பூராடம்: மகிழ்ச்சியும் சிரமமும் கலந்த பலன்களாக இன்று இருக்கும்
உத்திராடம் 1: புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுறுசுறுப்பு கூடும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: தாயாருக்கு உடல் உஷ்ணத்தால் ஏற்பட்ட சிரமம் நீங்கும்.
திருவோணம்: மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பணியில் ஆர்வம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: வாகனத்தின் மூலம் செலவு ஏற்படும். நேர்மை நிம்மதி தரும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: முன்பு இருந்த சிரமம் தீரும். நண்பர்கள் உயர்நிலை அடைவர்.
சதயம்: நேற்றைய கவலைகள் முழுக்கத் தீர்ந்து இன்று நிம்மதி பிறக்கும்.
பூரட்டாதி 1,2,3: பொது விஷயங்களைப் பொறுப்புடன் நடத்தி மகிழ்வீர்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: வீண் பழி வரக்கூடிய செயல்களில் இறங்க வேண்டாம்.
உத்திரட்டாதி: தேவையற்ற சச்சரவுகளில் ஈடுபடாதிருந்தால் இனிய நாள்.
ரேவதி: கலகலப்பான நாள். நண்பர், உறவினரின் சந்திப்பு நிகழும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!