தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 12

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 12

நேற்றைய தொடர்ச்சி...

கி.பி.1509

தமிழகத்தில் கிருட்டிணதேவராயர் ஆட்சி.

கி.பி.1595

ஆயிரம் தூண்கள் கொண்ட சிதம்பரம் கோவில் அரங்க வேலை ஆரம்பிக்கப்பட்டு 1685ல் முற்று பெற்றது. சைவ சித்தாந்த விளக்க நூற்கள் தோன்றின. சூரியனார் மடத்தின் தலைவர் சிவாக்கிர யோகிகள் சிவஞான போதத்துக்கும், சிவஞான சித்தியாருக்கும் உரைநூற்கள் எழுதினார்.
கி.பி.1619

யாழ்ப்பாணத் தமிழ் அரசு போர்த்துகீசியர்களால் கைப்பற்றப்பட்டது. 1658 வரையும் ஆதிக்கம் செலுத்தினர், பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன

கி.பி.1623-1659

திருமலை நாயக்கர் ஆட்சி. அரப்பணிகளும் கலைப்பணிகளும் அவருடைய புகழை வளர்த்தன. அழகிய தெப்பக்குளம், புதுமண்டபம், ஆவணிமூலை, இராயர் கோபுரம் - நாயக்கர்களால் கட்டப்பட்டன. 17 - ஆம் நூற்றாண்டில் எல்லப்பநாவலர் அருணாசலபுராணம், அருணைக் கலம்பகம், எழுதி சிவ எல்லப்ப நாவலர் என புகழ்பெற்றார். திருமலை நாயக்கனின் விருப்பப்படி மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழைப் படைத்தார். காசியில் காசி மடம் எழுப்பினர். நாயக்கர் காலத்தில் முத்துத் தாண்டவர் - தமிழில் பல அற்புதமான கீர்த்தனைகள் இயற்றினார். பல அமிர்தக்கவிராயர், சர்க்கரைப்புலவர் என்போரும் குறிப்பிடத்தக்கவர்கள். இரத்தின கவிராயர் - மச்ச புராணம் எழுதினார்.

நாயக்கர் கால இலக்கியங்கள் பொற்கொல்லர் வீரகவிராயர் - இசை கலந்த நடையில் அரிச்சந்திரபுராணத்தை படைத்தார்.

அதிவீர ராமபாண்டியன், நளனின் துன்பியில் வரலாற்றை நைடதம் நூலாக்கினான் இலிங்க புராணம், மகா புராணம், கூர்ம புராணம் கரிவலம் வந்த நல்லூர் சிவனைப்போற்றி பதிற்றுப்பத்து, அந்தாதி இலக்கயம் போன்றவையும் எழுதினார். அதிவீரராம பாண்டியனின் தம்பி வராத்துங்க ராம பாண்டியன் எழுதிய உடலுறவு இன்ப விளக்கநூல் - கோக்கோகம். இவர்கள் பாண்டிய அரசக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

கி.பி.1628 - 1688

திருவைகுந்தத்தில் பிறந்த சைவ சித்தாந்தி குமர குருபரசாமிகள் கலிவெண்பா, கயிலைக் கலம்பம் படைத்தார்.

கி.பி.1650

சைவ மடமான தரும புரம் ஆதீனம் குரு ஞானசம்பந்தரால் மாயவரம் அருகில் அமைக்கப்பட்டது
கி.பி.1676 - 1856

சிவாஜி தஞ்சையிலிருந்து சுல்தானிய ஆதிக்கத்தை ஒழித்ததுடன், 1677ல் தஞ்சையை மராட்டியர்களின் கீழ் கொண்டு வந்தார், விஜய நகரத்தின் வீழ்ச்சிக்கு பிண் மராட்டிய அரசு தோன்றியது. முகமதியர் அரசுகளை நசுக்கி முன்னேறியது. தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டனர். தமிழ்புலவர்களுக்கு அரசின் ஆதர்வு இல்லை. திருவாரூர் வைத்தியநாத்தேசிகர், வேதாரண்யம் தாயுமானவர், சுவாமிநாததேசிகர், சீர்காழி அருணாசலக் கவிராயர் (தமிழில் பல கீர்த்தனைகள் அமைத்த இசையறிஞர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இரன்டாம் சரபோசி மன்னர் சரஸ்வதி மகாலைக் கட்டினார்.

கி.பி. 1677

விஜய நகர பேரரசின் கடைசி வாரிசான ஸ்ரீரங்கனுடன் நாயக்கர் ஆட்சி முடிந்தது.

கி.பி. 1682-1689

அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் பதவிக்கு வந்தார். இவருடைய காலத்தில் கிருத்துவ துறவி ஜான்-டி-பிருட்டோ மதுரை பகுதியில் சமயத் தொண்டாற்றினார்.

கி.பி. 1688-1706

இராணி மங்கம்மாவின் காலம். உய்யக்கொண்டான் வாய்க்காலை செப்பனிடச் செய்தார். குளம் வெட்டி வளம் பெருக்கிட சாலைகளும் சோலைகளும், அன்னச்சாவடிகள், சத்திரங்கள், தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்தார். சமய சார்பற்ற குடிநலம் பேணினார். மதுரை பொற்றாமரைக் குளத்தின் அருகில் கல்யாண மண்டபத்தில் நினைவுச் சின்னமாக அவருடைய உருவம் ஓவியமாக உள்ளது. 'மங்கம்மாள் மலைமேற் சோலை' எனப் பாராட்டப் பட்டுள்ளது.

கி.பி. 1705-1742

தமிழ் சைவ சித்தாந்தியும் கவியுமான தாயுமானவர் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த காலம். தாயுமானவர் பாடல்கள் பக்தி மார்க்கம் வழியானவை.

கி.பி. 1706

மங்கம்மாவின் பேரன் விஜயரங்க சொக்கநாதன் காலம். தொடர்ந்து விஜயரங்கனின் மனைவி மீனாட்சி ஆட்சி செய்தார். சந்தாசாகிப் மீனாட்சியை சிறைப்படுத்தினர். கி.பி 1786-ல் திருச்சியைக் கைப்பற்றினார். நாயக்கர் ஆட்சிக்கு முடிவு.

கி.பி. 1712

மருத பாண்டியன் சாதாரண நிலையிலும் தோன்றி திறமையாலும் தொண்டாலும் சிவகங்கையின் நிகரற்ற தலைவனாகத் தோன்றினார் மருது பாண்டியன். அரசியல் முன்னோக்குப் பார்வையும், செயல்வன்மையும், பெற்று சிவகங்கையின் ஒப்பற்ற தலைவன் ஆனார். 1712 ல் ஆங்கிலேயருக்கு எதிராக மக்களின் இயக்கம் ஒன்றை உருவாக்கிப் புரட்சி செய்து ஆங்கிலேயர் பிடிக்கவிருந்த சிவகங்கையை மீட்டார். அதைப் பழைய அரச குடும்பத்திடம் ஒப்படைத்தார்.

இராமநாதபுரத்து மேலப்பனும், சிங்கம் செட்டியும், முத்துக் கருப்பனும், தஞ்சை ஞானமுத்துவும் மருது பாண்டியனின் தலைமையை ஏற்றனர், திருநெல்வேலியில் உள்ள பாளையக்காரர்களின் பக்க வலிமையையும் சேர்த்துக்கொண்டு புரட்சிக்காரர்களின் கூட்டிணைப்பு ஒன்றினை உருவாக்கினார், வரிகொடா இயக்கம் இராமநாதபுரத்தில் துவங்கியது. மேலப்பன் தீவிரவாதியாக மாறினார். சிறைக்கு சென்று பின்னர் தப்பித்தார். இராமநாதபுரத்தில் வரிகொடா இயக்கத்தை துவங்கினார்.

கி.பி.1760 ஏப்பிரல் 4

பாண்டிசேரியும், காஞ்சிபுரம், நீங்கலாக எல்லாக் கோட்டைகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டனர்

கி.பி.1761

புதுச்சேரியையும், செஞ்சியையும், மேற்கு கரையிலுள்ள மாகியையும் ஆங்கிலேயருக்குக் கொடுத்து விட்டு பிரெஞ்சுக்காரர்கள் சரணடைந்தனர். 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாளையக்காரர்களைப் பணிய வைக்கும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கி.பி.1761

திருநெல்வேலியின் மேற்பகுதியில் நேர்க்காட்டும் சேவல் பாளையத்தை ஆண்ட புலித்தேவன் ஆங்கிலேயர்களுக்கு கடுமையான எதிர்ப்பைக் கொடுத்தான். பாளையக்காரர்களின் புரட்சிப்புயலை எழுப்பினான். 1761-ல் தோற்கடிக்கப்பட்டான்.

கி.பி.1761

சகவீர பாண்டியன் மகன் வீரப்பாண்டிய கட்டபொம்மன் முப்பதாவது வயதில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். மருது பாண்டியர்களுடன் நல்லுறவில் இருந்தார்.

கி.பி.1799

செப்டம்பர் 5ம் தேதி கட்டபொம்மன் மேஜர் பார்னனுக்கு சரணடைய மறுத்தமையால் ஆங்கிலேயருடன் போர் நடந்தது. முதல் முயற்சியில் ஆங்கிலப்படை தோற்றது. மீண்டும் கோலார்பட்டி என்னுமிடத்தில் நடைப்பெற்ற போரில் வீரபாண்டிய கட்டபொம்மன் தோற்கடிக்கப்பட்டான். புதுக்கோட்டை காட்டில் மறைந்திருந்தான். காலப்பூர் என்ற காட்டிலிருந்த கட்டபொம்மனைப் புதுகோட்டை அரசன் விஜயரகுநாதத் தொண்டைமான் கைது செய்து ஒப்படைத்தான்.

கி.பி.1799

அக்டோபர் 16 - ஆம் தேதி கயத்தாற்றில் வீரபாண்டியன் தூக்கிலிடப்பட்டான். கடைசி நிமிடத்திலும் வீரத்தைக் காட்டி, இன உயர்வை நிலைநாட்டி விடுதலை உணர்ச்சியை வெளிப்படுத்தினான். பானர்மன் எழுதிய அறிக்கையில் "வீரபாண்டியக் கட்டபொம்மன் பகைவரும் போற்றும் பண்பிலும் வீரத்திலும் சிறந்திருந்தார். என எழுதப்பட்டிருக்கிறது

தொடரும்....

மேலதிக தமிழர் வரலாறும் தொன்மையும் பாகங்களைப் பார்வையிட Click Here

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!