29.12.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
29.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: சுபச்செலவு ஏற்படும். மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை காண்பீர்கள்.
பரணி: உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்சாகமான நாள்.
கார்த்திகை 1: மனதில் இருந்த கவலைகள் தீரும். நட்பு வட்டம் விரியும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: மேலதிகாரியிடம் இருந்து எதிர்பாராத உதவி கிடைக்கும்.
ரோகிணி: எதிரிகள் என்று நினைத்தவர்கள் நட்புக்கரம் நீட்டுவார்கள்.
மிருகசீரிடம் 1,2: பிறருக்கு உதவி செய்வதில் உங்களுக்கு மன நிறைவு ஏற்படும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: சிறு சிறு சிக்கல்கள் ஏற்படும். கவலை வேண்டாம்.
திருவாதிரை: வாழ்வில் சந்தோஷத் திருப்பம் உண்டு. முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: நினைத்ததை சாதிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4: இயந்திரம் ஒன்று பழுதாவதால் சிறு தாமதம் ஏற்படக்கூடும்.
பூசம்: உங்களது முயற்சிகள் நிறைவேறுவதில் காலதாமதமாகக்கூடும்.
ஆயில்யம்: மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்: 
மகம்: பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்தும் தீரும்.
பூரம்: மனதில் புது நம்பிக்கை துளிர்ப்பதால் உற்சாகம் அடைவீர்கள்.
உத்திரம் 1: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். கவலை தீரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: எதிர்காலம் சம்பந்தப்பட்ட முயற்சியில் முழு கவனத்துடன் இறங்குங்கள்.
அஸ்தம்: அதிக முயற்சி எடுத்து சகஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
சித்திரை 1,2: பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மகிழ்ச்சி கூடும்.

துலாம்: 
சித்திரை 3,4: சிறு சாதனை காரணமாக மகிழ்ச்சி வரும். உதவிகள் உண்டு.
சுவாதி: பழைய பிரச்னை தீரும். வருமானம் அதிகரிக்கும். நிம்மதி நிலவும்.
விசாகம் 1,2,3: எதிரான கருத்துடையோர் மனம் மாறுவர். உடல்நலம் மேம்படும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: முயற்சிகளில் மெதுவான வெற்றியே கிடைக்கும். பணம் வரும்.
அனுஷம்: பிறரிடம் இருந்து உதவி ஓரளவே கிடைக்கும். மனதிடம் அதிகரிக்கும்.
கேட்டை: புதிய சொத்துக்கள் வாங்கும் திட்டத்தில் முன்னேற்றம் உண்டு.

தனுசு: 
மூலம்: குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னை தீரும்.
பூராடம்: பொருளாதார நெருக்கடியால் சற்று பாதிப்பு ஏற்படலாம்.
உத்திராடம் 1: உறவினர் ஒருவரை பற்றி கவலை அளிக்கும் செய்தி வரும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: உங்களது அலட்சியப்போக்கினால் சிறு பிரச்னைக்கு ஆட்பட நேரிடும்.
திருவோணம்: எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவர். மகிழ்ச்சி கூடும்.
அவிட்டம் 1,2: விரயம் கூடும். பிரியமானவரிடம் யோசித்து பேசுவது நல்லது.

கும்பம்: 
அவிட்டம் 3,4: அலுவலக ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
சதயம்: தொழில், பணியில் வளர்ச்சி காண்பீர்கள். மன தைரியம் கூடும்.
பூரட்டாதி 1,2,3: உடல் ஆரோக்கியம் சீராகும். நீண்ட நாளாக இருந்த கவலை தீரும்.

மீனம்: 
பூரட்டாதி 4: எதிர்பாராத நன்மை ஒன்று நிகழும். யோகமான நாள். பகை தீரும்.
உத்திரட்டாதி: பிறர் பழிக்கும்படியான செயல்களை செய்யாதிருப்பது நல்லது.
ரேவதி: உங்களின் அவசர பேச்சினால் இக்கட்டில் மாட்டாமல் கவனமாயிருங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!