கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

#Death #Police
Prathees
4 years ago
 கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

மெதிரிகிரிய குசும்பொகுன பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த 27ஆம் திகதி  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் பந்துடன் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து கிணற்றில் விழுந்துள்ளது. பந்தை எடுக்க   முயன்ற போது சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளான்.

இரண்டு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் குறித்த சிறுவன்  இரண்டாவது குழந்தைஎனவும்,  நான்காம் ஆண்டு படித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மெதிரிகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4