தக்காளி மீன் பொரியல் பொரிக்கும் முறை.
#Cooking
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள்;
- மீன் - அரை கிலோ (கருவாவல், பாறை, கொடுவா ஏதாவது ஒரு வகை மீன்)
- மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
- சீரகத்தூள் - அரை ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- வெங்காயம் - 1
- தக்காளி - 2
- பச்சை மிள்காய் - 2
- மல்லி,கருவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவைக்கு
செய்முறை :
- முதலில் மீனை கழுவி சுத்தம் செய்து அரை ஸ்பூன் மிள்காய்த் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
- அரை மணி கழிந்து கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீனை பொரித்து எடுக்கவும்.
- பொரித்து எடுத்த பின்பு அதே பேனில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி,
- இஞ்சி பூண்டு, மிள்காய், மல்லி கருவேப்பிலை போட்டு வதக்கி நறுக்கிய தக்காளி சேர்த்து உப்பு சேர்த்து மசிய விடவும்,
- அத்துடன் மீதி உள்ள அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பொரித்த மீனை சேர்த்து பிரட்டி சிம்மில் தக்காளி சுண்டும் வரை வைக்கவும்.
- சுவையான டொமட்டோ ஃபிஷ் ஃப்ரை ரெடி.மல்லி இலை தூவி பரிமாறவும். இது நான், சப்பாத்தி, சாதம் வகைகளுடன் பரிமாறலாம்.