ஆஞ்சநேயர் அஷ்டோத்திர வடிவ பாடல்
கதிரவனின் ஒளி யே கருணையின் வடிவமே ஆஞ்சநேயா
கதிரவனின் கதிரினும் கடிதில் வருவாயே ஆஞ்சநேயா
கணமேனும் உனை மறவா நிலையருள வருவாயே ஆஞ்சநேயா
கண்களிலே என்றென்றும் நின்றருள வருவாயே ஆஞ்சநேயா
வாயு குமாரா காற்றோடு கலந்து நீ வருவாயே ஆஞ்சநேயா
அனுமான் என்ற பெயரால் என்னருகில் வருவாயே ஆஞ்சநேயா
அனுமானிக்கும் என் பொருளில் உதவிட வருவாயே ஆஞ்சநேயா
இதயத்தை திறந்து இராமனைக் காட்ட வருவாயே ஆஞ்சநேயா
இதயத்தில் தூய்மையுடன் பாடினால் வருவாயே ஆஞ்சநேயா
வானரர்கள் தலைவா தரணியில் வருவாயே ஆஞ்சநேயா
வானும் நிலனும் சிறக்க நீ வருவாயே ஆஞ்சநேயா
மனோவேகம் கொண்டவனே நினைத்ததும் வருவாயே ஆஞ்சநேயா
மனோதிடம் என்றும் எனக்கருள வருவாயே ஆஞ்சநேயா
இந்திரியங்கள் ஐந்தும் வென்றவா வருவாயே ஆஞ்சநேயா
இந்திரியங்கள் என்றும் அடக்கிட வருவாயே ஆஞ்சநேயா
புத்திகூர்மை மிக்கவனே வருவாயே ஆஞ்சநேயா
புத்தியில் உறைகின்ற உத்தமனாய் வருவாயே ஆஞ்சநேயா
ராமத்தியானம் செய்யும் நபர்க்கருள வருவாயே ஆஞ்சநேயா
ராமத்தியணம் ராமநாமம் சொல்வோரிடத்து வருவாயே ஆஞ்சநேயா
ஆஞ்சநேய நாமம் கொண்டு எனக்கருள வருவாயே ஆஞ்சநேயா
ஆசிகளால் எந்நாளும் நான்வாழ வருவாயே ஆஞ்சநேயா
மஹாவீரன் என்ற பெயரால் வருவாயே ஆஞ்சநேயா
மகிமை பலவும் தந்தருள வருவாயே ஆஞ்சநேய
அசோகவனம் சென்று தேவியை கண்டு வருவாயே ஆஞ்சநேயா
அந்த சோகமேதுமில்லாது காக்க வருவாயே ஆஞ்சநேயா
மாயா ரூ பங்கொண்டு மகிமைபுரிய வருவாயே ஆஞ்சநேயா
மாயா உலகில் எ ன்றென்றும் உணதருளை தர வருவாயே ஆஞ்சநேயா
பந்தங்கள் ஏதுமின்றி காத்தருள வருவாயே ஆஞ்சநேயா
பந்தயங்கள் யாவினும் வெற்றி கண்டு வருவாயே ஆஞ்சநேயா
பிள்ளையாரில் தொடுத்து எழுதவே வருவாயே ஆஞ்சநேயா
பிள்ளையாரென முடித்து எழுதவும் வருவாயே ஆஞ்சநேயா
துக்கங்கள் பலவும் போக்கியருள வருவாயே ஆஞ்சநேயா
தூக்கத்திலும் உன் நாமம் நவின்றருள வருவாயே ஆஞ்சநேயா
அயோத்தியாராமனுக்கு தூதுவனாய் வருவாயே ஆஞ்சநேயா
அயோக்கியர் எனதருகில் வராதருள வருவாயே ஆஞ்சநேயா
பாரிஜாத மலர்மாலை ஏற்றருள வருவாயே ஆஞ்சநேயா
பார் முழுவதும் உன் புகழ் பரவிட வருவாயே ஆஞ்சநேயா
சர்வ மந்திர சொரூபத்திலும் நின்றருள வருவாயே ஆஞ்சநேயா
எல்லப்பொருட்களிலும் நிறைந்தருள வருவாயே ஆஞ்சநேயா
எல்லா உயிர்களிலும் நின்றருள வருவாயே ஆஞ்சநேயா
கபிலகுலத்தலைவனாய் எழுந்தருள வருவாயே ஆஞ்சநேயா
கபில உனை வண ங்கிய எனக்கருள வருவாயே ஆஞ்சநேயா
ரோகங்கள் பலவும் போக்கியருள வருவாயே ஆஞ்சநேயா
ரோமஞ் சிலிர்க்க உன் நாமம் பாடிட வருவாயே ஆஞ்சநேயா
இராமனுக்கு தூதுவனாய வருவாயே ஆஞ்சநேயா
இராமன் புகழ் பாடுவோர்க்க்ருள இன்றும் நீ வருவாயே ஆஞ்சநேயா
உலகமே உன்புகழ் பாடிட நீ வருவாயே ஆஞ்சநேயா
உண்மையாய் உரைப்போர்க்கருளிட வருவாயே ஆஞ்சநேயா
தென்னிலங்கை இராவணனை வெற்றி கண்டு வருவாயே ஆஞ்சநேயா
தெவிட்டாத இன்பங்கள் பலவும் தர வருவாயே ஆஞ்சநேயா
தீராதி தீரனும் திருக்குமரனாய் வருவாயே ஆஞ்சநேயா
தீராத துன்பங்கள் பல போக்கியருள வருவாயே ஆஞ்சநேயா
சஞ்சீவி மலையெடுத்து ராமனுக்கு தர வருவாயே ஆஞ்சநேயா
சஞ்சலங்கள் யாவர்க்குமில்லாது போக்கியருள வருவாயே ஆஞ்சநேயா
இராட்சதர்களை கொன்று ராமனுக்கருள வருவாயே ஆஞ்சநேயா
இரவும் பகலும் எவரையும் காத்தருள வருவாயே ஆஞ்சநேயா
குணங்களின் மூலமாய் நின்றருள வருவாயே ஆஞ்சநேயா
குறையாத செல்வம் பல தந்தருள வருவாயே ஆஞ்சநேயா
தாமரைக்கண்ணின் காட்சிபெற வருவாயே ஆஞ்சநேயா
தாமசக் குணங்களை போக்கிட வருவாயே ஆஞ்சநேயா
பேரரசன் ராமனுக்கு துணைவனாக வருவாயே ஆஞ்சநேயா
பேராபத்து ஏதுமின்றி காத்தருள வருவாயே ஆஞ்சநேயா
விபீஷண னுக்கு அன்புடன் அருளிட வருவாயே ஆஞ்சநேயா
விபத்துக்கள் ஏதுமின்றி காத்தருள வருவாயே ஆஞ்சநேயா
பிரம்மச்சாரி ஆகி நின்று எனக்கருள வருவாயே ஆஞ்சநேயா
பிரம்மபதம் நினதருளால் கிடைத்திட வருவாயே ஆஞ்சநேயா
எதிர்காலம் முன்னரே அறிந்தருள வருவாயே ஆஞ்சநேயா
எதிரிகள் எனக்கேதுமின்ரி அருளிட வருவாயே ஆஞ்சநேயா
மாருதி என்ற பெயரால் எனக்கருள வருவாயே ஆஞ்சநேயா
மாறுதல்கள் பற் பலவில் முன்னேறியும் வருவாயே ஆஞ்சநேயா
வெற்றிலையால் மாலையணிந்து அழகாய் வருவாயே ஆஞ்சநேயா
வெற்றிகள் பலதந்தருள வருவாயே ஆஞ்சநேயா
சந்தனத்தில் காப்பு அணிந்து வருவாயே ஆஞ்சநேயா
சந்ததும் காத்தருள நின்னருளை தர வருவாயே ஆஞ்சநேயா
வடைமாலை பிரியமாக அணிந்து வருவாயே ஆஞ்சநேயா
வடிவழகன் இராமனையே வழிபட்டு வருவாயே ஆஞ்சநேயா
பணிவாக இராமனுக்கு பணிசெய்து வருவாயே ஆஞ்சநேயா
பணிந்தேன் உன் பாதம் தந்தருள வருவாயே ஆஞ்சநேயா
வெண்ணையுண்ட வாயால் காட்சி தர வருவாயே ஆஞ்சநேயா
வெண்ணையாக உருகிடுவேன் உன்னருளைபெற வருவாயே ஆஞ்சநேயா
பழங்களை விரும்பி ஏற்றிடும் நீ வருவாயே ஆஞ்சநேயா
பழமாக்கி பதமருள விரைந்து வருவாயே ஆஞ்சநேயா
வேர்க்கடலை மகிழ்ந்து உண்ண வருவாயே வருவாயே ஆஞ்சநேயா
வேறு ஏதும் வேண்டார்க்கு அருள் தர வருவாயே ஆஞ்சநேயா
கடலை யாவும் கடந்து வெற்றி கண்டு வருவாயே ஆஞ்சநேயா
கடல்போலார் கவலைகளை கடந்தருள வருவாயே ஆஞ்சநேயா
மலையாவும் கடந்து வெற்றியோடு வருவாயே ஆஞ்சநேயா
மலைபோல என்றென்றும் வந்தருள வருவாயே ஆஞ்சநேயா
சூடாமணி சீதைக்கு காட்டி வருவாயே ஆஞ்சநேயா
சூழுகின்ற இன்னல்களை களைந்திட வருவாயே ஆஞ்சநேயா
பத்துத்தலை ராவணனை அழித்திடவே வருவாயே ஆஞ்சநேயா
பற்றுதலை என்னிடமிருந்து நீக்கிட வருவாயே ஆஞ்சநேயா
சிரஞ்சீவியாய் என்றென்றும் வாழ்ந்து வருவாயே ஆஞ்சநேயா
சிரம்தாழ்த்தி வணங்குவோருக்கு அருளிட வருவாயே ஆஞ்சநேயா
அஞ்சிலே ஒன்றை பெற்றவனே வருவாயே ஆஞ்சநேயா
அஞ்சிலே ஒன்றை தாவியும் வருவாயே ஆஞ்சநேயா
ஐம்பொறி அடக்கி ஆண்டவனே வருவாயே ஆஞ்சநேயா
அஞ்சுதல் அடக்கி ஆண்டருளவும் வருவாயே ஆஞ்சநேயா
மகா ராவணனை மடியசெய்திடவே வருவாயே ஆஞ்சநேயா
எளியோர்க்கு என்றென்றும் அருளிட வருவாயே ஆஞ்சநேயா
எளியேனையும் நின் நினைவால் நிரப்பிட வருவாயே ஆஞ்சநேயா
பிள்ளையாராய் பிடித்து உன்னில் முடித்திட வருவாயே ஆஞ்சநேயா
பிழையேதும் வாராதவாறு காத்திடவும் வருவாயே ஆஞ்சநேயா
ஜெய ஹனுமான் ஜெய ஹனுமான் நானும் நவில வருவாயே ஆஞ்சநேயா
ஜெய ராமபக்தா என்று அனைவரும் அழைக்க வருவாயே ஆஞ்சநேயா