மற்றொரு வர்த்தமானி அறிவிப்பு தவறானது

#SriLanka
மற்றொரு வர்த்தமானி அறிவிப்பு தவறானது

ஆபாச பிரசுரங்களை தடை செய்யும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஆர்வமுள்ள பல்வேறு தரப்பினர் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சிறார்களின் நலன் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சட்டத்தை உருவாக்கும் போது படைப்பாளிகளின் காப்புரிமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை பரிசீலித்த நீதியமைச்சர் அலி சப்ரி, அமைச்சு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் சிவில் சமூக அமைப்புகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், குற்றவியல் சட்ட மறுசீரமைப்பு உபகுழு மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், திருத்தப்பட்ட சட்டமூலமொன்றை மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4