30.12.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது.
பரணி: நட்பால் நல்ல விஷயம் நடைபெறும். அலைச்சல் உண்டு.
கார்த்திகை 1: எதிரிகளின் பலம் குறையும். சேமிப்பில் ஆர்வம் கொள்வீர்கள்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: மனம் நிறையும். எடுத்த வேலையை எளிதாக செய்து முடிப்பீர்கள்
ரோகிணி: வெளிநாட்டில் இருக்கும் உறவினர் மூலம் சுபச்செய்தி வந்து சேரும்.
மிருகசீரிடம் 1,2: தடங்கலாகி நின்றுபோன வேலை இன்று நல்லபடியாக முடியும்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: குடும்பநிலை திருப்தி தரும். தொழில் வளர்ச்சி உண்டு.
திருவாதிரை: உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
புனர்பூசம் 1,2,3: பணியாளர்கள் நினைத்ததை நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள்.
கடகம்:
புனர்பூசம் 4: பிறரது விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.
பூசம்: குடும்பத்தில் எதிர்பார்த்த நன்மை வரும். கவலை தீரும்.
ஆயில்யம்: கற்பனை பயம் உண்டாகும். பணியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
சிம்மம்:
மகம்: வருங்கால நலனுக்காக முக்கிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
பூரம்: சேமிப்பு கூடும். குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் நிச்சயமாகும்.
உத்திரம் 1: வாழ்க்கைத்துணையின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பீர்கள்.
கன்னி:
உத்திரம் 2,3,4: நண்பர்களின் உதவியுடன் நினைத்த விஷயத்தை செய்து முடிப்பீர்கள்.
அஸ்தம்: புதிதாக சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள்.
சித்திரை 1,2: குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றம் உறுதியாகும்.
துலாம்:
சித்திரை 3,4: இன்றைய பயணங்கள் பலன் தருவதாக அமையும்.
சுவாதி: நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்று நன்கு முன்னேறுவீர்கள்.
விசாகம் 1,2,3: நெருங்கியவருடன் ஏற்பட்ட பகை உங்களது முயற்சியால் தீரும்.
விருச்சிகம்:
விசாகம் 4: பொழுதுபோக்கு அம்சங்களில் கூடுதல் ஆர்வம் காட்டுவீர்கள்.
அனுஷம்: புதிய திட்டங்கள் சற்றுத் தாமதமானாலும் நன்கு நிறைவேறும்.
கேட்டை: தடைப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டு. பயம் தீரும்.
தனுசு:
மூலம்: நெருங்கிய நண்பர்களிடம் உதவியை எதிர்பார்க்க இயலாது.
பூராடம்: வெளியில் சொல்ல முடியாமல் இருந்த பிரச்னைகள் தீரும்.
உத்திராடம் 1: விரயங்கள் குறையும். பணியிடத்தில் நன்மை உண்டு.
மகரம்:
உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். உழைப்பு கூடும்.
திருவோணம்: முயற்சி காரணமாக மனநிறைவு கிடைக்கும். ஓய்வு எடுங்கள்.
அவிட்டம் 1,2: உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லையே என்ற எண்ணம் வரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: உங்களது கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் விரைவில் வரும்.
சதயம்: திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
பூரட்டாதி 1,2,3: எதிரிகள் என்று நினைத்தவர்கள் உங்களுக்கு நன்மை செய்வர்.
மீனம்:
பூரட்டாதி 4: குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
உத்திரட்டாதி: நெருக்கமான நண்பர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.
ரேவதி: வம்பில் ஈடுபடாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள்.