பஸ் கட்டணம் 17.44 வீதத்தால் உயர்வு!  குறைந்தபட்ச கட்டணம் 17 ரூபாய்

#Bus
Prathees
2 years ago
பஸ் கட்டணம் 17.44 வீதத்தால் உயர்வு!  குறைந்தபட்ச கட்டணம் 17 ரூபாய்

ஜனவரி 05 ஆம் திகதி முதல் பஸ் கட்டணம் 17.44 வீதத்தால் அதிகரிக்கப்படும் எனவும் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் பஸ் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நேற்று (29) மாலை 6 மணியளவில் பஸ் சங்கங்களின் அமைச்சு,கால்நடை போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால்இ ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

பஸ் கட்டண உயர்வு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் கட்டண திருத்தம் தொடர்பான தேசிய கொள்கையின் படி கணக்கிடப்பட்டது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக கட்டணத்தை அதிகரிக்குமாறு அல்லது டீசல் மானியத்தை வழங்குமாறு தனியார் பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்,இ பயணிகளுக்கும் பஸ் உரிமையாளர்களுக்கும் நியாயமாக கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.