சிறையில் உள்ள தந்தைக்கு உணவுப்பார்சலில் போதைப் பொருளைக் கொண்டு சென்ற 15 வயது மகள் கைது

#Arrest
Prathees
4 years ago
சிறையில் உள்ள தந்தைக்கு உணவுப்பார்சலில் போதைப் பொருளைக் கொண்டு சென்ற 15 வயது மகள் கைது

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு உணவுப் பார்சலில் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கொண்டு சென்ற  கைதியின் 15 வயது மகளும் மற்றுமொரு நபரும் நேற்று (29) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக காலி சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த கைதி போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைதிக்கு கொண்டு வரப்பட்ட உணவுப் பொட்டலத்தை சோயாமீட் துண்டுகளில் மறைத்து வைத்துஇ நான்கு சிறிய போதைப் பொருள் பொதிகளை நுட்பமாக கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருளுடன் காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4