சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் இலங்கை யுவதிகள்! அம்பலமான அதிர்ச்சி தகவல்

Mayoorikka
4 years ago
சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் இலங்கை யுவதிகள்! அம்பலமான அதிர்ச்சி தகவல்

இலங்கை யுவதிகள் சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலைத்திட்டங்களுக்காக இலங்கைக்கு வந்த சீன பிரஜைகள்,இலங்கை யுவதிகளை திருணம் செய்து 
சீனாவுக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக பாலியல் தொழிலில்ஈடுபடுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 10 இலங்கை யுவதிகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு பிரிவின் பிரதானியொருவர் தெரிவித்தாா்.

ஏழைக் குடும்பங்களிலுள்ள அழகிய பெண்களை திருமணம் செய்து, பின்னர் அவர்களை
சீனாவுக்கு அழைத்துச் சென்று இரவு நேரங்களில் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனா்.

இவ்வாறு, ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்களின் காரணமாகவே, வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு புதிய சுற்றறிக்கை வெளியிட்டதாக உயர் பாதுகாப்பு பிரதானி ஒருவர் தெரிவித்தாா்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4