வாடகை காருக்கு 5 இலட்சம் ரூபா- யோசனைக்கு அனுமதி

Prabha Praneetha
4 years ago
வாடகை காருக்கு 5 இலட்சம் ரூபா- யோசனைக்கு அனுமதி

கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கு வாடகை கார் ஒன்றை தற்காலிகமாக பெறுவதற்காக மாதாந்தம் 5 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்குவதற்கு கொழும்பு மாநகர சபை அனுமதி வழங்கியுள்ளது.

அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ கார் பழுதுபார்ப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதுவரையில் வேறு வாகனம் வாடகைக்கு எடுக்கப்படுமெனவும் கொழும்பு மாநகர சபை மேயர் குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பிக்கள், செலவுகளை குறைக்க வேண்டிய தருணத்தில் அதிக விலைக்கு வாகனங்களை வாடகைக்கு எடுப்பதை ஏற்க முடியாது என தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இந்த போராட்டம் நியாயமானது என்றாலும், மாற்று வழி இல்லாத காரணத்தினாலேயே இந்த தீர்மானத்தை தான் ஏற்றுக்கொண்டதாக ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4