தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 14.
நேற்றைய தொடர்ச்சி...
1912
திராவிடர் அமைப்பு தோன்றியது. 1916 டிசம்பரில் தென்னிந்தியர் நல உரிமைக்கழகம் தோன்றியது. பின் நீதிக் கட்சி என்ற பெயருடன் இயங்கியது. வைதீகர் ஆதிக்கத்தாலும், சாதிக்கொடுமையாலும் புண்பட்டிருந்த மக்களிடத்தில் தனித்தமிழ்ப் பற்று ஏற்பட்டது.
1912-1974
மு.வரதராசனார் தமிழக வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இவருக்குத் தனியிடம் உண்டு. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதன் முதலாக பேரறிஞர் (டாக்டர்) பட்டம் பெற்றவர். 85 நூல்கள் எழுதியுள்ளார்.
1916
அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்.
1925
தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம்.
1930
முனுசாமி தலைமையில் நீதிக் கட்சி பதவிக்கு வந்தது.
1930-1959
பட்டுக் கோட்டை கலியாணசுந்தரம் மக்கள் கவிஞன். புரட்சி கவிஞர் பாரதிதாசன் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர். தன் பாடல்களால் தமிழ்த் திரையுலகில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தினார்.
1931
காமராஜர் மீது கொலைசதி, வெடி குண்டு வழக்கு. வ.உ.சி. வாதாடி காமராஜரையும் தொண்டர்களையும் காப்பாற்றினார்
1932
அக்டோபர் 1 ஆம் நாள் சட்ட மறுப்பு நாள் திருப்பூர் குமரன் என்னும் குமாரசாமி தொண்டர்களுடன் கொடியேந்தி வந்தேமாதரம் முழங்கினார். காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்டார். கொடி காத்த குமரன் அமரர் ஆனார். இராஜாஜி தலைமையில் உப்புச்சத்தியாகிரகம் திருமறைக்காடு (வேதாரண்யம்) யாத்திரை. ஓமந்தூர் இராமசாமி. ஓ.வி.அழகேசன், சர்தார் வேதரத்தினம், பம்பாய் தமிழ் பிரதிநிதி சுப்பிரமணியம் உள்ளிட்ட நூறு தொண்டர்கள் "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது"- நாமக்கல் கவிஞர் பாடலைப் பாடினார்கள்.
1925
ஆந்திர பல்கலைக்கழகம் உருவாகியது.
1928
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாகியது. தொழில் சட்டம், தொழில் விரிவாக்கம், தொழில் வளர்ச்சி, தொழில் நுட்ப ஆய்வு ஆகியவற்றிற்கு உதவியது. தேவதாசி முறையை ஒழிக்க சட்டமியற்றப்பட்டது.
1921
பெண்ணுக்கு வாக்குரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
1940
திராவிடநாடு கொள்கை வடிவம் பெற்றது.
1942
'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் வலுபெற்றது.
1944
சேலம் மாநாட்டில் திராவிடக் கழகம் உருவானது.
1949
திராவிட முன்னெற்றக் கழகம், "அண்ணா" என தமிழர்களால் பெருமையுடன் அழைக்கப்பெறும் தமிழ்ப் பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் உருவானது.
1949
குமாரசாமி ராஜாவின் அமைச்சரவை பொறுப்பு ஏற்றது.
திராவிடர் கழகம். சமூகச்சீர்திருத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியது. மூட நம்பிக்கைகள் திராவிடர்களின் தாழ்வுக்குக் காரணம் என்பதை முன் வைத்தது. தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டியது. பெண்ணுரிமை, மகளிர் கல்வி, விருப்ப மணம், விதவை மணம், அனாதை இல்லம், கருணை இல்லம், என்பன கழகத்தின் முக்கிய நோக்கங்களாயின.
1952
தமிழரசுக் கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானம் சித்தூர் மாவட்டப் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க உரிமைக்குரல் எழுப்பினார்.
1963
அறிஞர் அண்ணா தலைமையில் இந்தி எதிர்ப்புப் போர் அரசியல் சட்ட எரிப்பு.
தொடரும்...
மேலதிக தமிழர் வரலாறும் தொன்மையும் பாகங்களைப் பார்வையிட Click Here