பல நாட்கள ரிலீஸ் ஆகாத வலிமை டிரைலர்.. காரணம் என்ன?

Prabha Praneetha
2 years ago
பல நாட்கள ரிலீஸ் ஆகாத வலிமை டிரைலர்.. காரணம் என்ன?

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்துக்கு அஜித் ரசிகர்கள் தாண்டி திரை பிரபலங்கள் பலரும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

அதற்கு காரணம் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அஜித்தின் நடிப்பில் எந்த ஒரு படம் இதுவரை திரையில் வெளியாகவில்லை என்பது தான்.

அஜித்திற்கு திரைத்துறையில் இருக்கும் நடிகர்கள் கூட ரசிகர்களாக உள்ளனர். அதனால் இப்படத்தை பற்றி அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் வெளியாகும் என அனைவரும் காத்திருந்தனர்.

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்டு வந்ததால் படக்குழுவினர் சமீபகாலமாக பல அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.

முதலில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு கிலிம்ஸ் என்ற வீடியோ வெளியாகி அதுவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. பின்பு விசில் தீம் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம்  வரவேற்பு பெற்றது.

கேட்டு வந்தனர். ஆனால் தற்போது வரை வலிமை படத்தின் டிரைலர் வெளியாகவில்லை. அதற்கு காரணம் படத்தில் 2 சிஜி காட்சிகள் இருந்ததாகவும் இந்த 2 சிஜி காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டு எடிட்டிங் செய்து வருவதற்கு தாமதம் ஆனதால் தான் வலிமை படத்தின் டிரைலர் தற்போது வரை வெளியிட முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வலிமை படத்தின் ட்ரைலரில் அனைத்து விதமான சேஸிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாகவும் கண்டிப்பாக இந்த ட்ரெய்லர் வெளியானால் ரசிகர்கள் தாண்டி திரைப் பிரபலங்கள் பலருக்கும் இது பிடிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.