இலஞ்சம் பெற்ற 36 போ் கைது

Prabha Praneetha
4 years ago
இலஞ்சம் பெற்ற 36 போ் கைது

இலஞ்சம் பெற்ற 36 பேர் இதுவரையிலான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் அப்ஷரா கல்போரா இதுதொடர்பாக தெரிவித்துள்ளதாவது,

இந்த காலப்பகுதியில் இதுதொடர்பில் 70 முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். இதில் 33 முற்றிகைகளில் இருந்து 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 2 தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் அடங்கலாக 5 பொலிஸாரும் அடங்குகின்றனா்.

பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், 2 நகர சபை உறுப்பினர்கள், பொது மக்கள் சுகாதார பரிசோதகர்கள் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் இடம்பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4