31.12.2021 இன்றைய ராசி பலன்

Keerthi
2 years ago
31.12.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 
அசுவினி: எடுத்த வேலையை செய்து முடிப்பதில் சிறு சிரமம் இருக்கும்.
பரணி: பேச்சிலும் செயலிலும் நேர்மையாக உள்ளோருக்கு நல்ல நாள்.
கார்த்திகை 1: குடும்பக் கவலைகள் தீரும். பணியாளர்கள் நன்மை அடைவர்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: பேச்சில் கவனம் தேவை. பணியில் அலட்சியம் காட்டாதீர்.
ரோகிணி: தேவையற்ற பயத்தை உதறித்தள்ளுவது நல்லது.
மிருகசீரிடம் 1,2: தவறு செய்யும் நபர்களுடன் நட்பு கொள்ள வேண்டாம்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4: மனதில் உற்சாகம் கூடும். பேச்சால் நன்மை உண்டு.
திருவாதிரை: இன்று போட்டி பந்தயங்களில் பங்கேற்றால் பரிசு கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: கவலை தீரும். நீங்கள் நம்பியவர் நேர்மையாளராக இருப்பார்.

கடகம்: 
புனர்பூசம் 4: அலட்சியமின்றி மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்
பூசம்: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் குறைய அனுமதிக்காதீர்கள்.
ஆயில்யம்: எதிரி போல் செயல்பட்டவர்கள் நன்மை செய்த செய்தி வரும்.

சிம்மம்: 
மகம்: புதிய முறையில் பணியை அணுகி நன்மை காண்பீர்கள்.
பூரம்: புதிய முதலீடுகள் லாபத்தை நோக்கிச் செல்லும்.
உத்திரம் 1: வாகன வகையில் இருந்த பிரச்னை தீரும். கவலை முடிவுக்கு வரும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பணியாளர்கள் மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.
அஸ்தம்: நிலம் சம்பந்தப்பட்ட புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடுங்கள்.
சித்திரை 1,2: கலைத்துறையினரின் அறிமுகம் கிடைக்கும். மகிழ்ச்சி கூடும்.

துலாம்: 
சித்திரை 3,4: உங்களின் செல்வாக்கு கூடும். தனவரவு நன்றாக இருக்கும்.
சுவாதி: உங்களது கடின உழைப்பை நிர்வாகம் புரிந்து கொள்ளத் தாமதமாகும்.
விசாகம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த பிரச்னை அகலும். மகிழ்ச்சி உண்டு.

விருச்சிகம்: 
விசாகம் 4: குடும்பத்தினருடன் இருந்த வாக்குவாதம் முடிவுக்கு வரும்.
அனுஷம்: வாழ்க்கைத்துணை வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கேட்டை: வெளிநாட்டில் உள்ள உறவினர், நண்பரிடம் இருந்து நல்ல செய்தி வரும்.

தனுசு: 
மூலம்: உடல் நலம் மேம்படும். நேர்மையான சிந்தனைகளைக் கூட்டுங்கள்.
பூராடம்: குடும்ப அமைதி திருப்தி தரும். பணிச்சுமை அதிகரிக்கும்.
உத்திராடம் 1: பணியில் இருந்த தடையை முறியடித்து முன்னேறுவீர்கள்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: தொழிலில் அதிக ஆதாயத்துடன் புதிய வேலை வந்து சேரலாம்
திருவோணம்: உயரதிகாரிகளின் ஆதரவும் சலுகைகளும் உங்களுக்கு கிடைக்கும்.
அவிட்டம் 1,2: உழைப்பை அதிகமாக்க வேண்டியிருக்கும். பயம் நீங்கும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: குழந்தைகளின் வாழ்வில் நீங்கள் விரும்பிய நன்மை வரும்.
சதயம்: நட்பால் நன்மை கிட்டும் நாள். கூட்டு முயற்சி வெற்றி பெறும்.
பூரட்டாதி 1,2,3: ஒவ்வாத உணவை சாப்பிட்டதால் ஏற்பட்ட தொல்லை தீரும்.

மீனம்: 
பூரட்டாதி 4: வாகன யோகம் உண்டு. வீடு வாங்கும் வாய்ப்பு வரும்.
உத்திரட்டாதி: புதிய விஷயத்தை கற்றுக்கொண்டு அதில் தேர்ச்சி அடைவீர்கள்.
ரேவதி: குடும்பத்தில் மகிழ்வான போக்கு காணப்படும். உபரி வருமானம் உண்டு.