இலங்கையில் நாளாந்த மரணங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

#SriLanka #Death
Nila
4 years ago
இலங்கையில் நாளாந்த மரணங்கள்  தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

திடீர் விபத்துக்கள் காரணமாக நாளாந்தம் சராசரியாக 35 பேர் வரையில் இலங்கையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திடீர் விபத்துக்கள் காரணமாக நாட்டில் வருடாந்தம் 12000 பேர் உயிரிழக்கின்றனர் என அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஒரு ஆண்டில் சுமார் 3 முதல் 4 மில்லியன் பேர் வரையில் திடீர் விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர், எனவும் நாள் ஒன்றில் சுமார் 12,000 பேர் வரையில் திடீர் விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறெனினும் கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டில் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4