ஜனவரியில் அமைச்சரவை மாற்றம்! - அமைச்சர் கெஹலிய ஆரூடம்

Prabha Praneetha
4 years ago
ஜனவரியில் அமைச்சரவை மாற்றம்! - அமைச்சர் கெஹலிய ஆரூடம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை 2022 ஜனவரி மாதம் மறுசீரமைக்கப்படக்கூடும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை தெற்கு ஊடகங்கள் இன்று வெளியிட்டுள்ளன.

அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

அந்த மாற்றத்தை ஜனவரி 8 ஆம் திகதி நிகழ்த்துவதா அல்லது 18ஆம் திகதி நிகழ்த்துவதா என்பது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
 
முக்கியமான சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், புதிய சிலருக்கும் வாய்ப்பளிக்கப்படவுள்ளது அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4