யாழில் சூறாவளியால் பல குடும்பங்கள் பாதிப்பு!

Mayoorikka
4 years ago
யாழில் சூறாவளியால் பல குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் நயினா தீவு வடக்கு பகுதியில் வீசிய மினி சூறாவளியால் ஆறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீண்டும் மழையுடனான வானிலை நிலவும் நிலையில், மினி சூறாவளி வீசியுள்ளது. இதில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார்.

மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விபரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்
தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4