இராம நாமத்துக்கு உள்ள வலிமை என்ன? இப்படி யார் இராம நாமம் கூறவேண்டும்?

#spiritual #God
இராம நாமத்துக்கு உள்ள வலிமை என்ன? இப்படி யார் இராம நாமம் கூறவேண்டும்?

ராம ராம ராம ராம

நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த           தவறானால் அதற்கு வருந்துவதும் ,  தண்டனையை ஏற்பதுவும்,பிராயசித்தமும் ராம  நாமமே. காலால்  நடக்கும் ஒவ்வொரு  அடியும்  'ராம் ' என்றே நடக்கவேண்டும் .

எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம்  'ராம  நாம  ஜெபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல  ராம  நாமாவில் கரைய கரைய துக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.

ராம  நாமா'  எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால்  'ராம நாமா'  சொல்ல   மனம்  மட்டும் போதும். இதைதான்  "நா  உண்டு,  நாமா  உண்டு"   என்றனர்  பெரியோர்கள்

ராம  நாமாவை  உரக்க சொல்லுங்கள்.   காற்றில் ராம  நாம  அதிர்வு    பரவி,  
உங்களை  சுற்றிலும்   காற்றில் ஒரு தூய்மையை   ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும்  அந்த   தூய அதிர்வு  ஊடுருவி   தூய்மை மற்றும்  அமைதியை  கேட்பவருக்கும்  தரும்.

நாம தர்மம் பயத்தை போக்கி மோஷத்தை தரும்.
காமதேனு, சிந்தாமணி, கல்பக விருட்சம் எதையும் கொடுக்கும், ஆனால் நாம-தர்மம், நல்லதையே தரும்.

நாமம் சொன்னால் பகவானே வந்துவிடுவார்
சொல்பவரின், “ஜாதி, மதம், தரம், இடம், காலம்”, பேதமற்றது நாமம்.
நாமமே சரணாகதி, உலகுக்கு ஜீவன் வரும்போதும் போகும்போதும், நாமம் சொல்லலாம்.

நாமத்தால், புத்தி, மனம், தெளிவு பெற்று திருப்தி அடையும்.
நாமத்தால் தீர்க்க முடியாத பாவங்கள் இல்லை.

நாமத்தை எந்த அசுத்தமும் தீட்டும் பாதிக்காது.
நாமம் துன்பத்தை விலக்கும், நல்லதை தரும், அமைதி பிரேமை வளர்க்கும்
நாமத்தை, எண்ணுவதை விட, எண்ணுவது சிறப்பு.

நாமத்தால் அடைய நாமமே சாதனம்.
நாமம்,நிந்திப்பவனையும்-நாத்திககனையும் காப்பாற்றும்.
நாமத்தை பரபிரும்மாக நினைப்பவன், பரபிரும்மாகவே ஆகிவிடுவான்.

ராமநாமம் நினைப்போம்! 
ராமநாமம் துதிப்போம்! ! 
ராமநாமம் பற்றி நிற்போம் நாளும்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!