தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 15.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 15.

நேற்றைய தொடர்ச்சி...

1967

மார்ச் 6 ஆம் நாள் தமிழ்நாட்டில் 138 சட்டமன்ற இடங்களுடன் திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணாதுரையின் தலைமையில் ஆட்சியில் அமர்ந்தது. உடன் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு"ம் தமிழக ஆட்சியில் அமர்ந்தது. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டினை சென்னையில் நட்த்தினார். சென்னை மாநிலம் 1967 ஜூலை 18 ஆம் நாள் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் பெற்றது. இப்பணி எதிர்நோக்கி தன்னுயிர் ஈன்ற சங்கரலிங்கம் மனம் அமைதி அடைந்திருக்கும். சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1965ல் மொழி காத்தல் என்ற உறுதியுடன் தம் உயிர் ஈந்த தமிழர்க்கு மதிப்பளித்து இருமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்திக்குத் தமிழ் மண்ணில் இடம் இல்லை என்ற நிலை முடிவானது.

1969

பிப்ரவரி 3 ஆம் நாள் அண்ணா மறைந்தார். நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பணி ஆற்றினார். தொடர்ந்து முறையாக கலைஞர் மு.கருணாநிதி தமிழகத்தின் முதல்வரானார்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும், மீட்பும், உயர்விடமும் கிடைத்தன. உயர் கல்வியையும், நிர்வாக நடைமுறைகளையும் எளிமை ஆக்கியது. தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை மீட்டு உலகுக்கு எடுத்தியம்ப உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைச் சென்னையில் நிறுவினர். கோயில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக்கினர். மாநிலங்களுக்கு சுயாட்சி கோரினர்.

1977

எம்.ஜி.இராமச்சந்திரன் தமிழகத்தின் முதல்வரானார்.

1978

பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துண்வுத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டது. சிங்கள நாட்டிலிருந்து 100,000 தமிழர்கள் குடியுரிமை நீக்கப்பட்டு தமிழ் நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். இந்திய அரசும் தமிழர் சம்மதமின்றி இதற்கு உடன்பட்டு ஒத்துழைத்தது.

1981

ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. தஞ்சை, திருச்சி, கோயம்புத்தூரில் பல்கலைக்கழகங்கள் தோன்றின. தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், கொடைக்கானலில் பெண்களுக்கு அன்னை தெரசா பல்கலைக்கழகம், திருச்சியில் - பாரதிதாசனார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் - பாரதியார் பல்கலைக்கழகம்.

1983

புத்த மதம் சார்ந்த சிங்கள வெறியர்கள் தமிழ்ஈழ மண்ணில் வெறியாட்டம். 37 தமிழர்கள் ஈழச்சிறையில் படுகொலை செய்யப்பட்டனர். சாத்வீகம் சாத்தியமில்லை என்ற நிலையில் தமிழர்கள் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் ஆயுதம் தாங்கிய மறவர் பொறுப்பெற்றனர்.

" தமிழீழ விடுதலைப் புலிகள்" தமிழீழ தமிழர் உரிமை காக்கும் பணியில் தம் விலை மதிக்கவொண்ணா உயிர்க்கொடைக்கும் தயாராயினர்

1992

ஜெயராமன் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.

1997

கலைஞர் மு.கருணாநிதி தமிழக்த்தின் முதல்வரானார்.
2001

ஜெயராமன் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.

2006

கலைஞர் மு.கருணாநிதி தமிழகத்தின் முதல்வரானார்.

2009

இலங்கையில் "தமிழீழ விடுதலைப் புலிகள்"  தலைவர் மேதகு.வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டார் என்ற செய்தியை சிங்கள இராணுவம் வெளியிட்டது. ஆனால் சில நாட்களில், அவர் உயிருடன் இருப்பதாக "தமிழீழ விடுதலைப் புலிகள்" அமைப்பினுடைய அதிகாரப்பூர்வ இணையதளம் அறிக்கை வெளியிட்டது.

2011

ஜெயராமன் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.

2015

ஜெயராமன் ஜெயலலிதா தமிழகத்தின் மீண்டும் முதல்வரானார்.

முற்றும்.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 14.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 13.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 12.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 11.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 10.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 09.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 08.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 07.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 06.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 05.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 04.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 03.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 02.

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 01.

 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!