இன்று எரிவாயு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் மூலம் திடீர் உத்தரவு

#SriLanka #Litro Gas #Laugfs gas
இன்று எரிவாயு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் மூலம் திடீர் உத்தரவு

வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் Litro & Laughfs Gas ஆகிய நிறுவனங்கள் இன்று (31) மேன்முறையீட்டு  நீதிமன்றத்திற்கு அறிவித்தன.

சந்தையில் வெளியிடப்பட்ட அபாயகரமான எரிவாயு சிலிண்டர்களை மீளப்பெறுமாறு அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை நுகர்வோர் அதிகாரசபை உள்ளிட்ட எரிவாயு நிறுவனங்கள் பின்பற்றத் தவறியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிவில் சமூக ஆர்வலர் நாகாநந்த கொடித்துவக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த மனு நீதியரசர்களான ருவான் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனுவை எதிர்வரும் 26ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4