உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான வரி குறைப்பு

#Food
Prathees
4 years ago
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான  வரி குறைப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட சரக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான உற்பத்தி வரி ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நிதி அமைச்சரின் அங்கீகாரத்துடன் சந்தையில் தற்போதைய விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 மேலும் இலங்கை செய்திகளைப்   பார்வையிட இதில் கிளிக் செய்யவும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4