சில பிரதேசங்களுக்கு இன்று மழை

Prabha Praneetha
4 years ago
சில பிரதேசங்களுக்கு இன்று மழை

வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு சில பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களிலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிம் ஒருசில பிரதேசங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழைவீழ்ச்சி பதிவாகும்.

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய ஆகிய மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை நேரத்தில் பனிமூட்டம் நிறைந்த வானிலையை அவதானிக்க கூடியதாக இருக்கும்.

ஆகவே, இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும்போது ஏற்படக் கூடிய தற்காலிகமான கடும் காற்று மற்றும் மின்னலினால் ஏற்பட கூடிய அனர்த்தங்களை குறைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் பார்வையிட இதில் கிலிக் செய்யவும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4