புத்தாண்டுக்கு மக்களுக்கு பல பரிசுகளைக் கொடுத்த அரசாங்கம்!

Mayoorikka
4 years ago
புத்தாண்டுக்கு மக்களுக்கு பல பரிசுகளைக் கொடுத்த அரசாங்கம்!

நத்தாருக்கு முன்னதாக எரிபொருள்களின் விலைகளை அதிகரித்து நத்தார் பரிசு கொடுத்த அரசாங்கம், புத்தாண்டுக்கு முன்னதாக பால்மா விலையை அதிகரித்து புத்தாண்டுக்கு மக்களுக்கு பரிசு கொடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர்

சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். உறுதிமொழி மலையை மக்களிடம் கொடுத்து
ஆட்சிப்பீடமேறிய அரசாங்கம், தமக்கு வாக்குகளை வழங்கிய 69 இலட்சம் மக்கள் உள்ளிட்ட முழு மக்களையும் குழிக்குள் தள்ளிவிட்டது என்றார். தனமல்வில பௌதாகம மகா 
 வித்தியாலயத்துக்குகனிணிகளை கையளித்துவிட்டு அங்கு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கொரோனா தொற்றினால், பல்வேறான சவால்களுக்கு நாங்கள் முகங்கொடுத்தாலும்
எதிர்க்கட்சி என்றவகையில் பல்வேறான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்திருந்தோம். சீர்குலைந்திருக்கும் கல்வியை கட்டியெழுப்புவதற்கும்

பலமிக்க மாணவர் சமூதாயத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் இன்று இந்த வேலைத்திட்டங்களை செய்துக்கொண்டிருக்கின்றோம் என்றார்.

மேலும் செய்திகளை பார்வையிட

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4