இந்திய முறையில் மட்டன் பிரியாணி சமைக்கும் முறை.
#Cooking
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள்:
- மட்டன் – 1/2 கிலோ
- சீரக சம்பா அரிசி – 3 கப்
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- நெய் – 2 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 3
- தக்காளி – 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கொத்த மல்லி – 1/4 கப்
- புதினா – 1/4 கப் (நறுக்கியது)
- தண்ணீர் – 4 1/2 கப்
பிரியாணி மசாலாப் பொடிக்கு:
- பட்டை – 4
- சோம்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
- கல்பாசி – 5
- சீரகம் – 2 டீஸ்பூன்
- கிராம்பு – 5
- ஏலக்காய் – 5
- அன்னாசிப்பூ – 1
செய்முறை:
- தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
- சீரக சம்பா அரிசியை நீரில் நன்கு அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிரியாணி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி,
- பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி, அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.
- பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து சிறிது நேரம் பிரட்டி, பின் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
- பின்பு அதில் மட்டனை சேர்த்து நன்கு பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி10 விசில் விட்டு, தீயை குறைத்து 15 நிமிடம் வேக வைத்து இறக்கி விட வேண்டும்.
- விசில் போனதும், குக்கரை திறந்து, அதில் தண்ணீர் இருந்தால், மீண்டும் அடுப்பில் வைத்து, நீரை வற்ற வைக்க வேண்டும்.
- இறுதியில் அதில் அரிசியை போட்டு நன்கு கிளறி, பின் 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்ததும்,
- குக்கரை மூடி 1 விசில் விட்டு, தீயை குறைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி ரெடி!
மேலும் சமையல் குறிப்புகளை பார்க்க இதில் கிலிக் செய்யுங்கள்.