இலங்கையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியால் பாடசாலைக்கு ஏற்பட்ட சிக்கல்!

#SriLanka #Corona Virus #School #Student
Nila
4 years ago
இலங்கையில்  தற்கொலை செய்து கொண்ட மாணவியால் பாடசாலைக்கு ஏற்பட்ட சிக்கல்!

இலங்கையில் சியம்பலாவ பிரதேச்தில் பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

தற்போது குறித்த மாணவியை PCR பரிசோதனை செய்த போது கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

எச்.எம்.செஹானி செவ்வந்தி என்ற 15 வயதுடைய மாணவி தனது காதலனுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 29ஆம் திகதி கிணற்றில் குதித்து பலியாகியுள்ளார்.

அவர் கல்வி கற்ற பாடசாலையில் மேலும் சில மாணவிகள் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவியின் பெற்றோர் மற்றும் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் 31 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒன்லைன் கற்கை நெறிக்காக கொள்வனவு செய்யப்பட்ட கையடக்க தொலைபேசியில் இளைஞனுடன் காதல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலம் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4