தடுப்பூசி அட்டை: இன்றுமுதல் வருகிறது புதிய நடைமுறை

Mayoorikka
4 years ago
தடுப்பூசி அட்டை: இன்றுமுதல் வருகிறது புதிய நடைமுறை

பொதுமக்கள், பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது, கொவிட் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது, இன்று முதல் கட்டாயமாக்கப்படுகின்ற போதிலும், அது நடைமுறையாவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் எடுக்கும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்காக செயலி ஒன்றையும் கிவ்.ஆர் கோட் (QR Code) ஒன்றையும் உருவாக்க வேண்டும்.

இதற்கான பணிகள் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த செயன்முறைக்கு இரண்டு வார காலம் எடுக்கும்.

இந்நிலையில், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குப் பிரவேசிப்பது தொடர்பில், சட்ட கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையில் செயற்பட எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4