பிரச்சனை தீராவிட்டால் பதவி விலக தயார்: எச்சரிக்கும் அமைச்சர்

Mayoorikka
4 years ago
பிரச்சனை தீராவிட்டால் பதவி விலக தயார்: எச்சரிக்கும் அமைச்சர்

மக்களின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணாவிட்டால் தாம் பதவி விலகவும் தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

"இப்போது கேஸ் இல்லை, மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், எரிவாயு வெடிக்கிறது."

லிட்ரோ தலைவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். எரிவாயுவை மக்களுக்கு சரியான முறையில் வழங்க முடியாவிட்டால் பதவியை விட்டு விலகலாம்.

மக்கள் வீடுகளுக்கு தீ வைக்கிறார்கள்.. ஊடகங்களில் ஜனாதிபதி  சிரிக்கிறார். இவ்வாறான தலைவர் பதவி விலக வேண்டும்.

"சில நிறுவனங்களுக்கு பொறுப்பானவர்களை நியமிக்கவில்லை என்பதை நாங்கள் காண்கிறோம். 

“பதவிகளுக்கு பயந்து பதவிகளை காக்க பாடுபடுபவர்கள் நாங்கள் அல்ல, பதவிகளை விட்டு விலக தயாராக உள்ளோம்.இது மக்கள் சார்பாக நாம் முன்வைக்கும் வேண்டுகோள்.

அவர்கள் செவிசாய்க்காவிட்டால்,  அவர்களுக்கு எதிராக மக்களுடன் கைகோர்த்து, அவர்களை வெளியேற்றும் வரை  போராடுவோம்’’ என்றார்.

மேலும் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4