ரயில் கடவையில் இடம்பெற்ற பயங்கர விபத்து: தீயில் கருகி உயிரிழந்த நபர் தொடர்பில் வெளியான தகவல்

#Accident
Prathees
4 years ago
ரயில் கடவையில் இடம்பெற்ற பயங்கர விபத்து: தீயில் கருகி உயிரிழந்த நபர் தொடர்பில் வெளியான தகவல்

ரயில் கடவையில் இன்று  மதியம் 12.30 மணியளவில் கார் ஒன்று ரயிலுடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தை தொடர்ந்து கார் தீப்பிடித்து எரிந்ததுடன் அதில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த உத்திரதேவி விரைவு ரயிலுடன் வனவாசலைப் பகுதியில் வைத்து கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

ரயிலில் மோதிய கார் சுமார் 200 மீற்றர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தீப்பிடித்து எரிந்துள்ளது.

ரயிலின் முன்பகுதியும் தீப்பிடித்து எரிந்ததையடுத்து அப்பகுதி மக்கள் இணைந்து அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரயிலில்  மோதிய காரில் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரயில் ஓடும் போது ரயில் கடவையின் குறுக்கே தனது காரை ஓட்டுவதற்கு அதன் சாரதியின் பொறுப்பற்ற முடிவே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4