தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -16

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -16

நமது தமிழிலே உருவான இலக்கிய மற்றும் இலக்கண நூல்களின் மூலமாகத்தான் நமது பண்டைய கால பண்பாட்டினையும், வரலாற்றினையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. எண்ணற்ற நூல்கள் காலச் சக்கரத்தில் சிக்கி அழித்து விட்ட போதிலும் சில நூல்கள தற்போது் நமக்கு முழுமையாகவோ அல்லது சிதைந்தோ கிடைத்திருக்கின்றன. நமது தமிழ் கலாச்சாரத்தின் பொக்கிஷமான இவைகளே நம் தமிழினத்தின் முதுகெழும்பாக நின்று நம் தமிழை உலக முழுவதுமுள்ள பல மொழிகளையும், மொழி அறிஞர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.

சங்க காலம் - தொல்காப்பியம் -நுால் மரபு

தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் இலக்கண நூல் ஆகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும். தொல்காப்பியம் 1602 நூற்பாக்களால் ஆனது. இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே.    1

அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.    2

அவற்றுள்,

என்னும் அப் பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப.    3


என்னும் அப் பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப.    4

மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே.    5

நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்.    6

கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே.    7

ஔகார இறுவாய்ப்
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப.    8

னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய் என மொழிப.    9

மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா.    10

தொடரும்...

மேலதிக தமிழர் வரலாறும் தொன்மையும் பாகங்களைப் பார்வையிட Click Here