நீரில் மூழ்கி இருவர் பலி

Prabha Praneetha
4 years ago
நீரில் மூழ்கி இருவர் பலி

நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய, கப்புங்கொட கடற்கரையில் நேற்று (01) மாலை குளித்துக் கொண்டிருந்த 5 இளைஞர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனா்.

இந்நிலையில, இவர்களில்  ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

பிரதேசவாசிகளின் உதவியுடன் ஏனைய நால்வரையும் மீட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

பமுனுகம மற்றும் ஏகல பிரதேசங்களில் வசிக்கும் 17 மற்றும் 23 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

இதேவேளை , ஏனைய இருவரும் சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனா்.

அம்பேவெல பிரதேசத்தில் நீரில் மூழ்கி காணாமல் போன 21 வயதுடைய மற்றைய இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

இந்த சம்பவம் தொடர்பில், டங்கல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4