போலி விசா வழங்கும் இணையத்தளங்களிடம் அவதானமாக இருக்கவும்.

Prasu
4 years ago
போலி  விசா வழங்கும் இணையத்தளங்களிடம் அவதானமாக இருக்கவும்.

இலங்கைக்குள் வருகை தருவதற்கு ஆயத்தமாகும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு  விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ளது.

இதன்படி இலங்கை விசாக்களை வழங்கும் பயண மற்றும் குடிவரவு முகவர் என கூறி இணையத்தில் காணப்படும் போலி தளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கான விசா நோக்கங்களுக்கான ஒரே அதிகாரபூர்வ இணையத்தளம் eta.gov.lk/slvisa என்பதை மீண்டும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4