இலங்கையில் எதற்காக ஐந்து பிள்ளைகள் பெற வேண்டும்: யோசனை முன்வைத்த முன்னாள் அமைச்சர்

Mayoorikka
4 years ago
இலங்கையில் எதற்காக ஐந்து பிள்ளைகள் பெற வேண்டும்: யோசனை முன்வைத்த முன்னாள் அமைச்சர்

திருமணத்தின் பின்னர், ஐந்து பிள்ளைகள் பெற்றெடுப்பதை கட்டாயமாக்குமாறு தான் அரசாங்கத்திற்கு யோசனையொன்றை முன்வைப்பதாக முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்..

தம்புள்ளை நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் அனைத்து விடயங்களுக்கும் வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதை அடுத்தே, தான் இந்த யோசனையை முன்வைப்பதாக அவர் தெரிவித்தா்.

இதற்கமைய ”இளைய பிள்ளையை எண்ணெய் வரிசையில் நிறுத்த முடியும், இரண்டாவது பிள்ளை எரிவாயு வரிசையில் நிறுத்த முடியும், மற்றைய பிள்ளையை பால்மா வரிசையில் நிறுத்த முடியும், அடுத்த பிள்ளையை சீனி வரிசையில் நிறுத்த முடியும், கஞ்சியையாவது அருந்துவதற்காக அடுத்த பிள்ளையை அரிசி வரிசையில் நிறுத்த முடியும்” என பி.ஹரிசன் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4