மாணிக்கக்கல் வியாபாரிக்கு ஒமிக்ரோன் தொற்று!

#SriLanka #Gems #Covid 19
மாணிக்கக்கல் வியாபாரிக்கு ஒமிக்ரோன் தொற்று!

பேருவளையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதனைப் பேருவளை சுகாதார பிரிவைச் சேர்ந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் முதித அமரசிங்க இன்று தெரிவித்துள்ளாா்.

பேருவளை, சீனக் கோட்டையைச் சேர்ந்த 30 வயதுடைய மாணிக்கக்கல் வியாபாரிக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்லும் நோக்கில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற இலங்கை செய்திகளை பார்வையிட இதில் கிளிக் செய்யவும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4