தெஹிவளை கடலில் முதலை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka
Nila
4 years ago
தெஹிவளை கடலில் முதலை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

தெஹிவளை கடலில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடலில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் சுழியோடி ஒருவரே இவ்வாறு முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலையின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 58 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார் .

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் இலங்கை செய்திகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4