தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -17

தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -17

நேற்றைய தொடர்ச்சி....

மெய்யின் அளபே அரை என மொழிப.    11

அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே.    12

அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியும் காலை.    13

உட் பெறு புள்ளி உரு ஆகும்மே.    14

மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்.    15

எகர ஒகரத்து இயற்கையும் அற்றே.    16

புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும்
ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும்
ஆயீர் இயல உயிர்த்தல் ஆறே.    17

மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே.    18

வல்லெழுத்து என்ப க ச ட த ப ற.    19

மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன.    20

இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள.    21

அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின்
மெய்ம்மயக்கு உடனிலை தெரியும் காலை.    22

ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்
க ச ப என்னும் மூ எழுத்து உரிய.    23

அவற்றுள்,
ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும்.    24

ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்
தம்தம் இசைகள் ஒத்தன நிலையே.    25

அவற்றுள்,
ண னஃகான் முன்னர்
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய.    26

ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே.    27

மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும்.    28

ய ர ழ என்னும் புள்ளி முன்னர்
முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும்.    29

மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே.    30

அ இ உ அம் மூன்றும் சுட்டு.    31

ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா.    32

அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.    33

தொடரும்...

மேலதிக தமிழர் வரலாறும் தொன்மையும் பாகங்களைப் பார்வையிட Click Here

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4