நாட்டின் எதிர்காலம் இருண்டது..! இந்த வருடம் மிகவும் கஷ்டம்

#Colombo
Prathees
4 years ago
நாட்டின் எதிர்காலம் இருண்டது..! இந்த வருடம் மிகவும் கஷ்டம்

அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டால் இந்த ஆண்டு நாடு மீண்டும் ஒரு பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

கடந்த காலம் உலகிற்கு பெரும் பொருளாதார நெருக்கடியின் காலம்.  இலங்கை போன்ற சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளால் இந்த நிலைமையை தாங்கிக் கொள்ள முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம் இன்று மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

நிலைமையைத் தணிக்க தம் கட்சி உட்பட பத்து தரப்பினர் கொண்டு வந்த பிரேரணைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை எனவும் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4