கைமாறவுள்ள விவசாய அமைச்சர் பதவி! ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினரிடம் செல்லுமா?

Mayoorikka
4 years ago
கைமாறவுள்ள விவசாய அமைச்சர் பதவி! ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினரிடம் செல்லுமா?

விவசாய அமைச்சை தனது மூத்த சகோரரான சமல் ராஜபக்சவிடம் கையளிப்பதற்கு  ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, அமைச்சுக்குரிய கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அமைச்சு பொறுப்பில் மாற்றத்தை செய்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு அந்த அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு கோட்டாபய ராஜபக்சவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

தற்போது சமல் ராஜபக்ச நீர்ப்பாசன அமைச்சுப் பதவியை வகித்துவரும் நிலையில், புதிய அமைச்சு பொறுப்பை ஏற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4