நாட்டு மக்களுக்கு சுகாதார துறையினரின் அவசர வேண்டுகோள்!

Mayoorikka
4 years ago
நாட்டு மக்களுக்கு சுகாதார துறையினரின் அவசர வேண்டுகோள்!

பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவு பொது மக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான பைசர் மருந்து தற்பொழுது நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது..

கொரோனா தொற்று தடுப்புக்கான தடுப்பூசியின் 2ஆவது தடுப்பூசியை பெற்று 3 மாதங்கள் கடந்திருந்தால் விரைவாக பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ,சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக வருகைத்தரும் பொது மக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4