விவாதத்திற்கு தயாரா? சுமந்திரனுக்கு சவால் விட்ட ஹரீஸ்

Mayoorikka
4 years ago
விவாதத்திற்கு தயாரா? சுமந்திரனுக்கு சவால் விட்ட ஹரீஸ்

மாகாண சபை தேர்தலை ஒத்திப்போட காரணமாக இருந்தவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்   ஹரீஸ்   தெரிவித்துள்ளார்.

அவர்  முடிந்தால் தன்னுடன் விவாதத்திற்கு வரட்டும் உண்மையை சொல்ல தான் தயங்கப் போவதில்லை என அம்பாறை கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

தற்போது தமிழ் பேசும் கட்சிகளினால் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல் தொடர்பில் கையாளப்படும் ஆவணங்கள் தமக்கு காண்பிக்கப்படவில்லை எனவும் கூறினார். இவ்வாறு தான் 1987 ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் முஸ்லீம் தரப்பிற்கு சரியாக காட்டப்படாது செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தினார்.

13வது சீர்திருத்த சட்ட மூலம் அஸ்ரப் உட்பட கிழக்கு மாகாண முஸ்லீம்களும் முழுமைகாக எதிர்த்த ஒரு சட்ட மூலமாகும்.

தற்போதைய ஒப்பந்த நகலும் வடகிழக்கில் பிறந்த எந்தவொரு நாடாளுமன்ற பார்வைக்காக வழங்கப்படவில்லை. இது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4