இந்தியாவிற்கு 50 வருட குத்தகை: அடுத்தவாரம் கைசாத்து!

Mayoorikka
4 years ago
இந்தியாவிற்கு 50 வருட குத்தகை: அடுத்தவாரம் கைசாத்து!

புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், இந்தியாவுக்கு 50 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் அடுத்துவரும் ஒரு வாரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

அவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் பிரைவேட் Trinco Petroleum Terminal லிமிடெட் சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா ஐ.ஓ.சி ( LIOC ) உடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்யவுள்ளது. அதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இது தொடர்பான ஒப்பந்தம் ஒரு வாரத்தில் கையெழுத்தாகுமென அறியமுடிகின்றது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4